குஜராத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது தாயார் ஹீராபென் மோடியைச் சந்தித்து ஆசி பெற்றார்.
தனது தாயாருடன் சுமார் 45 நிமிடங்கள் கழித்த மோடி , காந்திநகரில் உள்ள கட்சி (பாஜக) தலைமையகமான 'கமலம்' அலுவலகத்தில் அமித் ஷா, மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்தித்தார்.
அவரது தாயாரை சந்திப்பதற்கு முன், அகமதாபாத்தில் பிரமுக்சுவாமி மகராஜின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறும் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர் மீது வழக்கு.. செய்த தவறு என்ன? சட்டம் சொல்வது இதுதான்!
விழாவையொட்டி, சர்தார் படேல் ரிங் ரோட்டில் பிரமாண்டமான ‘பிரமுகசுவாமி மகாராஜ் நகர்’ கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று வாக்களித்த மோடி....
பிரதமர் மோடி, அமித் ஷா, முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் அகமதாபாத்தில் வாக்களித்தனர். இன்று ராணிப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் பிரதமர் வாக்களித்தார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில், 89 இடங்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத் நகரில் உள்ள 16 தொகுதிகள் உட்பட மீதமுள்ள 93 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது
சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் உள்ள 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலில் 1.29 கோடி ஆண்கள் மற்றும் 1.22 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 5.96 லட்சம் உள்ளதாக பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.