தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் ஒரு வேட்பாளர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சியில் 9ஆம் வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. பாஜகவைச் சேர்ந்த கார்த்தி என்பவர் இத்தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்று படுதோல்வியை தழுவினார். அவருடைய குடும்பத்தில் 5 ஓட்டுகள் இருந்தும் அவரால் குடும்ப ஓட்டுகளை கூட பெற முடியாமல் போனது ஆச்சரியமாக பேசப்பட்டது.
இதே போன்றதொரு ‘ஒற்றை ஓட்டு’ சம்பவம் தற்போது குஜராத்திலும் அரங்கேறியிருக்கிறது. சில தினங்களுக்கு முன் குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 8,686 கிராம பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் 344 மையங்களில், நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி 6,481 பஞ்சாயத்துக்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,205 பஞ்சாயத்துக்குகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் நன்மைகள் - ஒரு பார்வை
ஒரு ஓட்டு - கண்ணீர் சிந்திய வேட்பாளர்
முடிவுகள் அறிவிக்கப்பட்ட வாபி மாவட்டத்தில் உள்ள சார்வாலா கிராம பஞ்சாயத்தில் கிராம தலைவருக்கு போட்டியிட்ட சந்தோஷ் என்பவர் இத்தேர்தலில் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருக்கிறார். இதற்கும் அவரின் குடும்பத்தில் மட்டும் 12 வாக்குகள் இருக்கின்றன. சந்தோஷின் சொந்த வாக்கினை தவிர அவருக்கு வேறு எந்த ஓட்டும், குடும்பத்தினரும் கூட வாக்களிக்காதததை எண்ணி வாக்கு எண்ணும் மையத்தில் சந்தோஷ் கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு கட்சி பின்னணி இருந்தாலும் கூட சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்
முன்னதாக கேரளாவில், சில நாட்களுக்கு முன்னர் எர்ணாகுளம் மாவட்டத்தின் பைரவம் நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், இடப்பள்ளிசிரா எனும் வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெறும் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்றது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Election 2021, Gujarat