குஜராத் மாநகராட்சித் தேர்தல்: மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க - காங்கிரஸ் படுதோல்வி

பா.ஜ.க

குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளில் நடைபெற்றத் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 • Share this:
  குஜராத்திலுள்ள அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. அதில், அகமதாபாத்தில் 42.5 சதவீத வாக்குகளும், ஜாம்நகர் 53.4 சதவீத வாக்குகளும், ராஜ்கோட்டில் 50.7 சதவீத வாக்குகளும், பாவ் நகரில் 49.5 சதவீத வாக்குகளும், வதோதரா 47.8 சதவீத வாக்குகளும், சூரத்தில் 47.1 சதவீத வாக்குகளும் பதிவாகின. 1.14 கோடி மக்கள் வாக்களார் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், 52.83 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். ஆறு மாநகராட்சிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

  பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருந்துவருகிறது.

  192 வார்டுகள் கொண்ட அகமதாபாத்தில் பா.ஜ.க 101 வார்டுகளில் காங்கிரஸ் 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

  76 வார்டுகள் கொண்ட வதோதராவில் பா.ஜ.க 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

  72 வார்டுகள் கொண்ட ராஜ்கோட்டில் பா.ஜ.க 56 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இன்னமும் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.

  120 வார்டுகள் கொண்ட சூரத்தில் பா.ஜ.க 62 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 5 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 17 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

  52 வார்டுகள் கொண்ட பாவ் நகர் தொகுதியில் பா.ஜ.க 31 வார்டுகளிலும் காங்கிரஸ் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

  64 வார்டுகள் கொண்ட ஜாம் நகரில் பா.ஜ.க 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: