முகப்பு /செய்தி /இந்தியா / கள்ள உறவுக்கு இடையூறு : பெற்ற குழந்தையையே காதலனுடன் சேர்ந்து சித்தரவதை செய்து கொன்ற கொடூர தாய்!

கள்ள உறவுக்கு இடையூறு : பெற்ற குழந்தையையே காதலனுடன் சேர்ந்து சித்தரவதை செய்து கொன்ற கொடூர தாய்!

காதலனுடன் கைதான தாய்

காதலனுடன் கைதான தாய்

2 வயது குழந்தையை பெற்ற தாயே காதலனுடன் சேர்ந்து சித்தரவதை செய்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலிம்பாய் வாகேர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஹூசேனா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரு ரெஹான் மற்றும் ஆர்யன் என்ற ஆண் குழந்தைகள் இருந்தன.

தம்பதிக்கு இடையே தொடர் சண்டைகள் ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் என்ற வாலிபருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு தனது குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து தாய் ஹூசேனா பெற்ற குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த விஷயம் கணவர் சலீமுக்கும் தெரியவந்து, இதை அவ்வப்போது தட்டிக்கேட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹூசேனா தனது தாய் வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஜாகீருடன் தனி வீடு எடுத்து வசிக்கத் தொடங்கியுள்ளது. 4 வயது மூத்த மகனை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, 2 வயது குழந்தை ஆர்யனை மட்டும் ஹூசேனா தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று 2 வயது குழந்தை ஆர்யன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டதாக தந்தை சலீமுக்கு தகவல் வந்துள்ளது. பதறிப்போய் வந்து குழந்தையின் பார்த்த சலீம் அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தையின் வயிறு, முதுகு பகுதிகளில் காயங்களும் தழும்புகளும் இருந்துள்ளது.

இதையும் படிங்க: சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிய பரோட்டா... பெண் பரிதாப பலி... அதிர்ச்சி சம்பவம்..!

தனது மனைவியும், அவரது காதலன் ஜாகீரும் தான் குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக சலீம் காவல்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குழந்தை சித்தரவதை செய்யப்பட்டு உயிரிழந்தது உறுதியானது. சலீம் அளித்த புகாரின் பேரில் ஹூசேனா மற்றும் காதலன் ஜாகீர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

First published:

Tags: Child murdered, Crime News, Extramarital affair, Gujarat, Illegal affair