Home /News /national /

திருமணமான ஆணுடன் இளம்பெண் ஓட்டம்... மீட்பு செலவில் பாதியை காவல்துறைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமணமான ஆணுடன் இளம்பெண் ஓட்டம்... மீட்பு செலவில் பாதியை காவல்துறைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனது மகளைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட முறையில் ரூ.8.06 லட்சம் செலவு செய்ததாக பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட முறையில் ரூ.8.06 லட்சம் செலவு செய்ததாக பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட முறையில் ரூ.8.06 லட்சம் செலவு செய்ததாக பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணமான ஆணுடன் ஓடிப்போன பெண்ணை கண்டுபிடிக்க, மாநில அரசு செலவழித்த தொகையில் பாதி தொகையை  திருமணமான ஆண் செலுத்த வேண்டும் என்று குஜராத் நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 20 வயது பெண்ணுடன், ரகாபாய் பார்மர் என்ற 28 வயதுடையவர், கடந்த 2021 மே மாதம் மாயமானார்.

இந்த விவகாரத்தில், பார்மருடன் சென்ற தனது மகளைக் கண்டுபிடிக்க முடியாததால்,  அவரது தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பின்னர் ஒருவழியாக பார்மருடன் சென்ற இளம்பெண் மீட்கப்பட்டு, வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். விசாரணையில், பார்மர் ஏற்கனவே வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டது நீதிமன்றத்திற்கு தெரியவந்தது.

இதையும் படிங்க - 'வேலையின்மையால் இந்தியாவின் எதிர்காலம் கவலை அளிக்கிறது' - பாஜக எம்.பி.

இந்த தகவலை அறிந்த நீதிமன்றம், பெண்ணைக் கண்டுபிடித்து அழைத்து வருவதற்காக செலவழிக்கப்பட்ட தொகையை பார்மரிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்தது.

7 மாத கால விசாரணையில் பார்மரையும், இளம்பெண்ணையும் கண்டுபிடிப்பதற்காக 17,170 மணிநேரத்தை போலீசார் செலவிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரூ.42,500. செலவு செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தின் முன் இருவரையும் ஆஜர்படுத்த ரூ. 75 ஆயிரம் செலவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க - ’சாக்லெட்’ வாங்க இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச சிறுவன்

இதனால், பெண்ணை மீண்டும் அவரது குடும்பத்திற்கு அழைத்து வர மொத்தம் ரூ.1,17,500 செலவிடப்பட்டுள்ளது. இந்த விபரங்களைக் கேட்ட நீதிபதிகள் பார்மரையும், இளம்பெண்ணையும் கண்டுபிடிப்பதற்காக மாநில அரசு செலவிட்ட நிதியில் பாதித் தொகையான ரூ. 55 ஆயிரத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க - 5 ஆண்டுகளில் புழக்கத்தில் இல்லாமல் போன ரூ.2,000 நோட்டுகள்

இந்த தொகையை உயர் நீதிமன்ற பதிவேட்டில் பார்மர் டெபாசிட் செய்ய வேண்டும். அவர் பணம் செலுத்தத் தவறினால், பதிவுத்துறை அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து, பார்மர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

பார்மர் பணத்தை செலுத்தியதும், அதை ராஜ்கோட் நகர காவல்துறை நல நிதியில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தனது மகளைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட முறையில் ரூ.8.06 லட்சம் செலவு செய்ததாக பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது நிலைமையை எண்ணி வருத்தம் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், உரிய நீதிமன்றத்தை அணுகி நஷ்டஈடு கோர அனுமதி வழங்கினர்.
Published by:Musthak
First published:

Tags: Illegal relationship

அடுத்த செய்தி