இப்படியாக இவர் தன்னை அவதாரம் என்று கூறிக்கொண்டு பல நாட்கள் வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழித்ததால்தான் இவரை அவரது பணிக்காலம் முடியும் முன்பே ‘ரிட்டையர்டு’ ஆக்கி வீட்டுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் குஜராத் நீராதார அமைச்சகத்துக்கு ஜூலை 1ம் தேதி கடிதம் எழுதிய ‘விஷ்ணுவின் அவதாரம்’ என்று கூறிக்கொள்ளும் சந்திர ஃபிபார், ‘அரசில் பேய்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. ரூ.16 லட்சம் கிராஜுவிட்டி வரவேண்டும், ஒரு வருட சம்பளம் வந்தாக வேண்டும், என்று கேட்டுள்ளார்.
தன்னை துன்புறுத்தியதற்காக பூமியில் கடும் வறட்சியை உருவாக்கப் போகிறேன், நான் தான் விஷ்ணுவின் கல்கி அவதாரம், என்னிடம் மந்திரசக்திகள் உள்ளன. ஜாக்கிரதை என்று எச்சரித்துள்ளார்.
ஃபிபார் குஜராத் மாநில நீராதார அமைச்சகத்தில் கண்காணிப்பு பொறியாளராகப் பணியாற்றி வந்தார். நர்மதா அணை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டமான சரோவர் புனர்வஸ்வத் திட்டத்தில் இவர் நியமிக்கப்பட்டார்.
2018ம் ஆண்டு 8 மாதங்களில் வெறும் 16 நாட்களே இவர் அலுவலகம் வந்துள்ளார் என்பதற்காக இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தான் கல்கி அவதாரம் என்றும் தன்னால்தான் உலகில் மழை பெய்கிறது என்றும் கூறிக்கொள்ளும் இவர் அலுவலகம் வராமலேயே சம்பளம் கேட்பதாக நீராதார அமைச்சக செயலாளர் ஜாதவ் கூறுகிறார்.
“அவரது அர்த்தமற்ற பிதற்றல் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். அவரது கிராஜுவிட்டி பேப்பர்கள் புரோசஸ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவர் தான் அவதாரம் என்றெல்லாம் கூறத் தொடங்கியவுடன் இவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவரது மன நிலையையொட்டி அரசு இவரை பணிக்காலம் முன்பே ஓய்வு பெற சிறப்பு அனுமதி அளித்தது. பொதுவாக விசாரணை உள்ள நபருக்கு பணிக்காலம் முடியும் முன்பே ஒய்வு பெற அனுமதி கிடையாது” என்றார்.
ஃபிபார் தன் கடிதத்தில், கடந்த 20 ஆண்டுகளில் நல்ல மழையை பெய்ய வைத்திருக்கிறேன், இதற்கு என்னிடம் உள்ள மந்திர சக்திதான் காரணம், இதனால் நாடு 20 லட்சம் கோடி லாபம் அடைந்துள்ளது. ஆனாலும் என்னை மதிக்காமல் அலுவலகத்தில் பேய்கள் அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கின்றன. ஆகவே நான் கடும் வறட்சியை உருவாக்கப் போகிறேன். ஏனெனில் நான் விஷ்ணுவின் 10வது அவதாரம். சத்யுகத்தில் நான் தான் ஆள்வேன், என்று கூறியுள்ளார்.
இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்று குஜராத் நீராதார அமைச்சக அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.