• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Video | தனது மாடுகளை காப்பாற்ற சிங்கத்தை நேருக்கு நேர் நின்று பிரம்பால் விரட்டிய நபர்!

Video | தனது மாடுகளை காப்பாற்ற சிங்கத்தை நேருக்கு நேர் நின்று பிரம்பால் விரட்டிய நபர்!

சிங்கத்தை விரட்டும் விவசாயி

சிங்கத்தை விரட்டும் விவசாயி

குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் சிங்கங்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனது கால்நடைகளை காப்பாற்ற சிங்கத்தையே துணிச்சலாக பிரம்பை வைத்து விவசாயி விரட்டும் விடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

    குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் சிங்கங்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. உணவுக்காக அவை அவ்வப்போது, காடுகளை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்துக்கொன்று சாப்பிடுவது சகஜமானது.

    இந்நிலையில், அம்ரேலி பகுதியில் சமீபத்தில் கால்நடைகளை விரட்டி வந்த சிங்கத்தை, விவசாயி ஒருவர் பிரம்பால் விரட்டிஅடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனது மாடுகளை வேகமாக சிங்கம் விரட்டி வந்த நிலையில், கையில் பிரம்புடன் கூச்சல் போட்ட விவசாயி, பின்னர் துணிச்சலாக சிங்கத்தை நோக்கி பிரம்பை வீச, சிங்கம் திரும்பி ஓடியது.



    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: