Home /News /national /

வங்கிக் கணக்கில் தவறுதலாக கிரெடிட் ஆன ரூ.11,677 கோடி.. சமார்த்தியமாக லாபம் பார்த்த முதலீட்டாளர்

வங்கிக் கணக்கில் தவறுதலாக கிரெடிட் ஆன ரூ.11,677 கோடி.. சமார்த்தியமாக லாபம் பார்த்த முதலீட்டாளர்

டிமேட் வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி வரவு

டிமேட் வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி வரவு

குஜராத்தை சேர்ந்த ஒருவர் தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வந்த ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் ரூ.5 லட்சம் பார்த்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India
    சிலரது வாழ்வில் எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டம் திடீரென்று வந்து நிற்கும். அதை சமார்த்தியமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் காணும் திறமை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அப்படி தான் குஜராத்தை சேர்ந்த ஒருவர் போகிற போக்கில் வந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி லட்சக் கணக்கில் லாபம் பார்த்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிப்பவர் ரமேஷ் சாகர்.  பங்குச் சந்தை முதலீட்டாளரான இவர், 6 ஆண்டுகளாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு டிமேட் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். அப்படி இருக்க, இவரது டிமேட் அக்கவுண்டில் கடந்த ஜூலை 26ஆம் தேதி எதிர்பாராத விதமாக ரூ.11,677 கோடி வரவு வந்துள்ளது. தனது கணக்கில் தவறுதலாக பணம் வரவு வந்ததை தெரிந்து கொண்டதும் ரமேஷ் பதற்றப்படவில்லை. மாறாக அதில் இருந்து இரண்டு கோடி ரூபாய் தொகையை பங்குச் சந்தையில் உடனடியாக முதலீடு செய்துள்ளார். அன்றைய தினமே முதலீடு செய்த பணத்தை வர்த்தக செய்து அதில் ரூ.5 லட்சமும் லாபம் பார்த்துள்ளார்.

    இதையும் படிங்க: சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.. ஆனால் இப்போது அரசு பேருந்தை ஓட்டுகிறேன்..! - அசத்தும் சாதனை பெண்மணி

    இடைப்பட்ட நேரத்தில் தான் வங்கியும் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து ரமேஷுக்கு தகவல் தெரிவித்து அன்றைய இரவு பணத்தை மீண்டும் பெற்றுள்ளது. இந்த எட்டு மணி நேர கேப்பில் ரமேஷ் தனது சாமார்த்தியத்தால் ரூ.5 லட்சம் லாபம் பார்த்துள்ளார் ரமேஷ். ஒரு நாள் கோடீஸ்வராக வாழ்ந்து அந்த பெரிய அதிர்ஷ்டம் சில மணிநேரம்தான் இருந்தாலும் அதில் லட்சங்களில் லாபம் பார்த்த ரமேஷுக்கு இணையவாசிகள் பலரிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Gujarat, Stock market, Stock market investor

    அடுத்த செய்தி