தெரு நாய் மீது இரக்கமற்ற தாக்குதல்... குஜராத்தில் வாலிபர் வெறிச்செயல்!

தெரு நாய்

முதலில் இஜாஸ் ஷேக், நாயை தனது பெல்ட்டால் கட்டி வைத்திருக்கிறார். பின்னர் இரும்பி கம்பி ஒன்றால் தொடர்ந்து அடித்திருக்கிறார். பின்னர் நாயை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து அவருடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வார்டு 8 அலுவலக பகுதியில் கழற்றிவிட்டு சென்றிருக்கிறார்.

  • Share this:
தெரு நாய் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் மிருகத்தனமான வெறியாட்டம் நடத்திய நபரை விலங்கு நல ஆர்வலர் ஒருவரின் புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் வதோதராவின் மச்சிபீத் பகுதியில் வழக்கமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தது தெரு நாய் ஒன்று. அதற்கு பகுதிவாசிகள் உணவளித்து வந்துள்ளனர். அந்த தெரு நாய் மீது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சரமாரியான தாக்குதலை நடத்தியிருக்கிறார். மேலும் அந்த நாயை அவர் கட்டி வைத்து இரும்புக் கம்பியால் அடித்ததில் நாயின் பற்கள் உடைபட்டுள்ளன. சுமார் அரை கிலோ மீட்டருக்கு அவரின் இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து இழுத்துச் சென்று சாலையோரத்தில் வீசிச் சென்றிருக்கிறார்.

மச்சிபீத் பகுதியின் 8வது வார்டு அலுவலகத்தில் நாய் ஒன்று மோசமான காயங்களுடன் இருப்பதாக அப்பகுதி விலங்கு நல ஆர்வலர் ஒருவருக்கு பகுதிவாசி ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்திருக்கிறார். அதன் பேரில் விலங்கு நல ஆர்வலர் சம்பவ இடத்துக்கு சென்ற போது
நாயின் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. மேலும் அந்நாய் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விலங்கு நல ஆர்வலர் கூறுகையில், “உள்ளூர்வாசி ஒருவரிடம் இருந்து தொலைபேசியில் இந்த தகவல் எனக்கு கிடைத்தது. நான் சென்று பார்த்த போது நாயின் பற்கள் உடைக்கப்பட்டிருந்தன, மேலும் நாயின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தேன்.

பகுதிவாசிகள் என்னிடம் நடந்தவற்றை கூறினர், இஜாஸ் ஷேக் என்ற இளைஞர் நாயை கண்முடித்தனமான தாக்கியதாக அவர்கள் கூறினர். முதலில் இஜாஸ் ஷேக், நாயை தனது பெல்ட்டால் கட்டி வைத்திருக்கிறார். பின்னர் இரும்பி கம்பி ஒன்றால் தொடர்ந்து அடித்திருக்கிறார். பின்னர் நாயை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து அவருடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வார்டு 8 அலுவலக பகுதியில் கழற்றிவிட்டு சென்றிருக்கிறார். நாய் அடிபட்டிருப்பதை பார்க்கும் போது அந்த இளைஞர் மிகவும் இரக்கமற்றவர் என புரிந்து கொள்ள முடிகிறது.

பின்னர் இது தொடர்பாக இளைஞர் மீது விலங்கு நல ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது விலங்குகள் நல சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
Published by:Arun
First published: