ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிடுவதில் நீடிக்கும் சிக்கல்!

எனவே, மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மார்ச் 8-ம் தேதி ஹர்திக் பட்டேல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

news18
Updated: March 29, 2019, 6:41 PM IST
ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிடுவதில் நீடிக்கும் சிக்கல்!
ஹர்திக் படேல்
news18
Updated: March 29, 2019, 6:41 PM IST
ஹர்திக் பட்டேலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், ஹர்திக் பட்டேல் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் பெரும்பான்மை சமூகமான பட்டேல் இனத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ஹர்திக் பட்டேல் 2015-ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்தின்போது மெஹ்சானா மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஹர்திக் பட்டேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில், விஸ்நகர் நீதிமன்றம் ஹர்திக் பட்டேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. ஹர்திக் பட்டேல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, குற்றவழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், ஹர்திக் பட்டேல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று மார்ச் 8-ம் தேதி ஹர்திக் பட்டேல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், ஹர்திக் பட்டேல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.

Also see:

First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...