தீவிர புயலாக உருவாகியுள்ள ‘வாயு புயல்’.... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

இதே நேரத்தில் தமிழகத்தில் குமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தீவிர புயலாக உருவாகியுள்ள ‘வாயு புயல்’.... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
வாயு புயல்
  • News18
  • Last Updated: June 12, 2019, 6:58 AM IST
  • Share this:
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான வாயு, நாளை அதிகாலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அரபிக்கடலின் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் மத்திய பிராந்தியத்தில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்கு நோக்கி மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது.

தீவிர புயலான வாயு, நாளை அதிகாலையில் குஜராத்தின் போர்பந்தர் - மஹுவா இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 110 முதல் 135 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்றும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதே நேரத்தில் தமிழகத்தில் குமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குமரி, நெல்லை மாவட்ட மீனவர்கள் அரபிக்கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் கூத்தன்குளி, உவரி , இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாயு புயல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் குஜராத் மாநில அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், பேரிடர் மீட்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புயலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Also watch
First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading