• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அபார வெற்றி- காங்கிரஸுக்கு செக் வைத்த ஆம் ஆத்மி

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அபார வெற்றி- காங்கிரஸுக்கு செக் வைத்த ஆம் ஆத்மி

பாஜக

பாஜக

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சி (ஜிஎம்சி) தேர்தலில் பாஜக 44 இடங்களில் 41 இடங்களைகளை கைபற்றி பெரிய வெற்றியை பெற்றது.

  • Share this:
    காந்திநகர் மாநகராட்சியில் உள்ள 44 இடங்களுக்கு கடந்த 3-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 162 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமின்றி கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 44 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆம் ஆத்மி 40 இடங்களில் வேட்பாளர்களை களமிறக்கியது.

    பகுஜன் சமாஜ் கட்சி 14 வார்டுகளில் போட்டியிட்டன. தேசியவாத காங்கிரஸ் இரு இடங்களிலும் மற்ற கட்சிகள் ஆறு இடங்களிலும், 11 சுயேட்சைகளும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 56.24% வாக்குகளே பதிவாகின. இந்தத் தேர்தல் வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 44 இடங்களில் 41 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஆம் ஆத்மி ஓரிடத்தில் வெற்றி பெற்றது.

    இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்குப் பதில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்தது, ஏனெனில் 17% வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறியது. ஆம் ஆத்மி காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்தது, இதனால் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. முதல் முறையாக சுயேச்சைகள் ஆதரவின்றி காந்திநகர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.

    இதோடு மேலும் 3 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் என்னவெனில் பன்வாத் முனிசிபாலிட்டியை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் தட்டிப்பறித்தது. தேவ்பூமி துவாரகாவில் 24 இடங்களில் காங்கிரஸ் 16 இடங்களில் வெல்ல பாஜக 8 இடங்களையே கைப்பற்றியது.

    ஒரு இடம் கைப்பற்றினாலும் பெருமை கொள்வதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது, “பாஜக, காங்கிரசைப் பொறுத்தவரை நாங்கள் தோற்ற கட்சி, ஆனால் ஒரு இடம் என்பது சாதாரணமல்ல, தொண்டர்களைப் பாராட்டுகிறோம், ஒரு புறம் அதிகார வெறியும் மமதையும் கொண்ட கட்சி எதிரில் நாங்கள் முழு மக்கள் நேயத்துடன் போட்டியிட்டோம்” என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.

    காந்தி நகர் மாநகராட்சி தேர்தல் வெற்றி, பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்று பாஜக கூறியுள்ளது. மேலும் குஜராத்தில் 3வது கட்சிக்கு இடமேயில்லை என்பதையும் இந்தத் தேர்தல் எடுத்துரைப்பதாக தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் சி.ஆர். பாட்டீல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: