• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தண்ணீர் தொட்டியில் ’சரக்கு’ பாட்டில்கள் பதுக்கல்... மதுபோதையில் திரிந்த எருமைகள்...

தண்ணீர் தொட்டியில் ’சரக்கு’ பாட்டில்கள் பதுக்கல்... மதுபோதையில் திரிந்த எருமைகள்...

எருமைகள்

எருமைகள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், எருமைகளின் குடிநீர் தொட்டியில் மூன்ஷைன் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.

  • Share this:
குஜராத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணை எருமைகள் மது அருந்திய சம்பவத்தை அடுத்து, அங்குள்ள மூன்று விவசாயிகள் தங்கள் பண்ணையில் சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து மூன்று விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து AFP பத்திரிகையிடம் உள்ளூர் போலீஸ் அதிகாரி திலிப்சின் பல்தேவ் கூறியதாவது, மதுபானங்களை குடித்த எருமைகள் விசித்திரமாக செயல்படத் தொடங்கியது. மேலும் அவற்றின் வாயில் இருந்து நுரை வர ஆரம்பித்தது. இதனை கண்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்து உள்ளூர் கால்நடை மருத்துவரை அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து கால்நடைகளை சோதனை செய்த மருத்துவர், எருமைகள் குடித்துக் கொண்டிருந்த நீர் தொட்டியை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் ஒரு விசித்திரமான வாசனையைக் கவனித்ததோடு, தண்ணீரின் நிறம்  மாறி  இருப்பதையும் கண்டார். இதையடுத்து, ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்த அவர் காவல்துறைக்கு தகவல் அளித்ததாக அதிகாரி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், எருமைகளின் குடிநீர் தொட்டியில் மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. அவற்றில் சில பாட்டில்கள் உடைந்ததால், அவை கால்நடைகளின் குடிநீரில் கலந்துள்ளதுள்ளது. இதையடுத்து கடந்த திங்களன்று (ஜூலை 8) பண்ணையில் சோதனை நடத்திய போலீசார் சுமார் ரூ.32,000 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமான சாராயம் காய்ச்சி விற்று வந்த மூன்று விவசாயிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மதுபானம் தயாரிப்பது, அதனை விற்பனை செய்வது, வாங்குவது, அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்வது ஆகிய செயல்கள் சட்டவிரோதமானது. இந்த குற்ற செயலில் ஈடுபடும் நபர்களுக்கு அதிக அபராதமும் மற்றும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில், குஜராத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள மினசோட்டா பகுதியில் ஒரு அணில் ஒன்று புளித்த பேரிக்காயை சாப்பிட்ட பிறகு தற்செயலாக போதையில் தத்தளித்த சம்பவம் வைரலானது. இந்த சம்பவத்தின் வீடியோ கடந்த ஆண்டு யூடியூபில் வெளிவந்தது. அதில் அணில் பேரிக்காயை உட்கொண்ட பிறகு ஒரு மினியேச்சர் பிக்னிக் மேசையில் நிற்க கூட சிரமப்படுவதைக் காணலாம்.

Also read... Anand Mahindra: இயற்கை உருவாக்கிய நீச்சல் குளம் - வியக்கும் ஆனந்த் மகேந்திரா!

அதற்காக வைக்கப்பட்டிருந்த சோளம் மற்றும் விதைகளை கஷ்டப்பட்டு கடித்து வாயில் முணுமுணுப்பதை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் போதையில் இருந்த அணில் பக்கவாட்டில் சாய்ந்து இருந்தபடி காணப்பட்டது. அணில் அதன் சமநிலையைத் தக்கவைக்க அங்கிருந்த கிண்ணத்தின் விளிம்பைப் பயன்படுத்தியது. ஆனால் அது மீண்டும் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது. போதையில் இருக்கும் ஒரு நபர் எவ்வாறு தடுமாறுவரோ அதே போன்ற செயல்களை அணில் செய்தது. பின்னர் தன்னை சுற்றியுள்ள மரத்தின் உச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அணில், இறுதியாக அது தன்னைச் சமப்படுத்திக் கொண்டு அதன் சிற்றுண்டியைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தது. இந்த வைரல் வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவனித்து குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: