ஹோம் /நியூஸ் /இந்தியா /

உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்.. சிலை வைத்து திருமணம் நடத்திய குடும்பம் - வினோத சம்பவம்

உயிரை மாய்த்துக்கொண்ட காதலர்கள்.. சிலை வைத்து திருமணம் நடத்திய குடும்பம் - வினோத சம்பவம்

உயிரிழந்த காதல் ஜோடிக்கு திருமணம்

உயிரிழந்த காதல் ஜோடிக்கு திருமணம்

உயிரிழந்த காதல் ஜோடிகளின் சிலைகளுக்கு அவர்களின் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

காதல் தோல்வியில் உயிரை மாய்த்துக்கொண்ட ஜோடிக்கு குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து சிலை அமைத்து அதற்கு திருமணம் நடத்திய வினோதம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் தாபி மாவட்டத்தில் உள்ள நேவாலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவரும் இவரது தூரத்து உறவுக்கார பெண்ணான ராஞ்சனா என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், இருவரையும் குடும்பத்தினரும் உறவினரும் தொடர்ந்து வசை பாடியுள்ளனர். விரக்தியில் கணேஷ் மற்றும் ராஞ்சனா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு ஜோடியாக தற்கொலை செய்து உயிரிழந்தனர்.

இது இருவரின் குடும்பத்தினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிராமத்தினரையே அதிர்ச்சியை ஆழ்த்தியது. நாம் தவறு செய்துவிட்டோம் என்ற மன வருத்தம் இரு குடும்பத்திற்கும் நீண்ட காலம் இருந்த நிலையில் அவர்கள் ஒன்றாக சந்தித்து ஒரு முடிவெடுத்தனர். உயிரிழந்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.

இதையும் படிங்க: குழந்தை வரம்.. மாந்திரீக பூஜை.. இளம்பெண்ணை மனித எலும்புத் தூள் சாப்பிட வைத்த கணவன் வீட்டார்...

இதற்காக உயிரிழந்த கணேஷ் மற்றும் ரஞ்சனாவை போல இரு சிலைகளை உருவாக்கி அந்த இரு சிலைகளுக்கும் கடந்த ஜனவரி 14ஆம் தேதி இரு குடும்பத்தாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.உயிரிழந்த இருவருக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைத்து விதமான சடங்குகளுடன் திருமணம் வைத்த வினோத சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: Gujarat, Lovers, Marriage, Suicide, Viral News