குஜராத் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து பாஜக தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் இணைந்து கொண்டதால் இம்முறை குஜராத்தில் தேர்தல் களம் மும்முனை போட்டியாக இருந்தது. தற்போதைய தேர்தல் நிலவரப்படி, 150க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக வரலாற்று வெற்றி பெறவுள்ளது. காங்கிரஸ் சுமார் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அந்த தேர்தலில் 80க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் பாஜகவுக்கு தோல்வி பயத்தை காட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த ஹார்திக் படேல், அல்பேஸ் தாகூர்,ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்களே பிரதான காரணம்.
கடந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக ஹார்திக் படேலை காங்கிரஸ் கட்சி நியமித்தது. ஆனால், கட்சி மேலிடத்திற்கும் ஹார்திக் படேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதேபோல், அல்பேஷ் தாக்கூரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இதையும் படிங்க: நாட்டிலேயே முதல் முறையாக ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி.. அசத்தும் தனியார் நிறுவனம்..!
இந்த தேர்தலில் பாஜக சார்பில் விராம்கம் தொகுதியில் ஹார்திக் படேல் போட்டியிட்டார். அதேபோல், அல்பேஷ் தாக்கூர் காந்திநகர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இருவரும் தற்போது முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த இரு தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுபவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Gujarat, Hardik Patel