ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆட்சியை தக்கவைக்குமா பாஜக? குஜராத், இமாச்சல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை!

ஆட்சியை தக்கவைக்குமா பாஜக? குஜராத், இமாச்சல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை!

குஜராத்

குஜராத்

Gujarat Election 2022 Results: குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 63 சதவீத வாக்குகளும், 5ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகின.

மொத்தம் ஆயிரத்து 621 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், சராசரியாக 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பிறகு சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள், பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக 37 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க :  பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி.. டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றி!

அகமதாபாத் மாவட்டத்தில் 3 மையங்களும், சூரத் மற்றும் ஆனந்த் ஆகிய மாவட்டங்களில் தலா 2 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், மாநிலம் முழுவதும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், லேப்டாப், ஐபேட் மற்றும் பதிவு செய்யக்கூடிய கருவிகள் எதற்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் குஜராத்தில் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 92 இடங்களே தேவை என்பதால், பிற்பகலுக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

இதேபோல 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு பின்பு வெளியான அத்தனை கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கே சாதகமாக உள்ளன. குஜராத்தில் பாஜக 120க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பிறகு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

First published:

Tags: Assembly Election 2022, Election Result, Gujarat Assembly Election, Himachal Pradesh