ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேஸ் சிலிண்டரை சைக்கிளில் கட்டி வாங்குச்சாவடிக்கு வந்த எம்.ஏல்.ஏ

கேஸ் சிலிண்டரை சைக்கிளில் கட்டி வாங்குச்சாவடிக்கு வந்த எம்.ஏல்.ஏ

காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனானி

காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனானி

தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர், கேஸ் சிலிண்டர் உடன் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்கு செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. தெற்கு குஜராத், கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அம்ரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனானி, குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்க சைக்கிளில் கேஸ் சிலிண்டரை ஏந்திச் சென்று வாக்களித்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மாநிலத்தில் நிலவும் வேலையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகளை பரேஷ் தனானி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பணவீக்கத்தை தோற்கடிக்க தான் வாக்களித்து உள்ளதாகவும் எனது வாக்கு புதிய அரசாங்கத்துடன் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும். அதிகார மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஆட்சிக்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

First published:

Tags: Assembly Election 2022, Gas Cylinder Price, Gujarat