ஹோம் /நியூஸ் /இந்தியா /

10,000 ஒரு ரூபாய் நாணயங்களை டெபாசிட்டாக செலுத்திய சுயேட்சை வேட்பாளர்.. மிரண்டு போன தேர்தல் அலுவலர்

10,000 ஒரு ரூபாய் நாணயங்களை டெபாசிட்டாக செலுத்திய சுயேட்சை வேட்பாளர்.. மிரண்டு போன தேர்தல் அலுவலர்

10,000 ஒரு ரூபாய் நாயணங்களை டெப்பாசிட்டாக தந்த வேட்பாளர்

10,000 ஒரு ரூபாய் நாயணங்களை டெப்பாசிட்டாக தந்த வேட்பாளர்

குஜராத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனது வேட்புமனு தாக்கலின் போது டெபாசிட் தொகை ரூ.10,000 முழுவதையும் ஒரு ரூபாய் நாணயங்களாக மட்டுமே செலுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் மாநிலத்தை தேர்தல் ஜுரம் தற்போது பற்றியுள்ளது. அம்மாநில சட்டபேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. அதன்படி, 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.

  தேர்தலில் வெற்றி பெற முன்னணி கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் பரபரப்பாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், தேர்தல் காலத்தில் சுவாரசியமான சம்பவங்களும், தனித்துவமான வேட்பாளர்களும் களமிறங்குவதை காணலாம்.அப்படி தான் காந்திநகர் வடக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அனைவரையும் மலைக்க வைக்கும் விதமான செயலில் ஈடுபட்டுள்ளார். மகேந்திரபாய் பட்னி என்ற 35 வயது நபர் காந்திநகர் வடக்கு தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்குகிறார்.

  இவர் ]வேட்மனு தாக்கல் செய்ய வந்த போது டெபாசிட் தொகை ரூ.10,000ஐ ஒரு ரூபாய் நாணயங்களாக மட்டுமே செலுத்தியுள்ளார். இதற்காக இரண்டு சாக்குப்பையில் 1000 ஒரு ரூபாய் நாயணங்களை சேகரித்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காந்திநகரின் குடிசை பகுதியில் வசித்து வந்த இவர், தனது குடிசை வீட்டை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இழந்துள்ளார்.இவர் வசித்த குடிசை பகுதியில் 5 நட்சத்திர விடுதி கட்டவும், ரயில்வே நிலையத்தை புனரமைக்கவும் 521 குடிசைகள் அகற்றப்பட்டுள்ளன. தனக்கு ஏற்பட்ட பாதிப்பையும் ஏழை எளிய மக்களின் நிலைமையும் உணர்த்தவே இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரல் - எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

  இது குறித்து அவர் கூறுகையில், சாதாரண ஏழை தொழிலாளரான நான், முறையான வீடு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வருகிறேன். எனவே, என்னைப்போன்ற ஏழை மக்களிடம் ஒரு ஒரு ரூபாயாக வசூலித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எனக்கு பணம் கொடுத்த 10,000 பேரும் எனக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்துள்ளனர்" என்றார். குஜராத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Candidates, Election 2022, Gujarat