ஹோம் /நியூஸ் /இந்தியா /

வரலாற்று வெற்றி.. குஜராத்தில் 7வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக!

வரலாற்று வெற்றி.. குஜராத்தில் 7வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக!

பாஜக

பாஜக

Gujarat Election 2022 : கிட்டத்தட்ட 155 இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில்தான் முன்னிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 63 சதவீத வாக்குகளும், 5ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகின.

மொத்தம் ஆயிரத்து 621 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், சராசரியாக 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பிறகு சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள், பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வந்தது. முன்னிலை என்றாலும் சரசரவென தொகுதிகளின் எண்ணிக்கையில் லீட் செய்தது பாஜக. காங்கிரஸ் மெல்ல மெல்ல நகரத்தொடங்கியது.

ஒரு கட்டத்தில் ஆட்சி அமைக்க தேவையான  எண்ணிக்கைகளையெல்லாம் தாண்டி அசுர வேகத்தில் பாஜக லீட் செய்தது. தற்போது நிலவரப்படி கிட்டத்தட்ட 155 இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில்தான் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் குஜராத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து 7 வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.

First published:

Tags: Assembly Election 2022, BJP, Gujarat Assembly Election