மோடி பேரணியாக சென்றது விதி மீறல் இல்லை! தேர்தல் ஆணையம் பதில்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் ரானிப் பகுதியிலுள்ள பள்ளியில் மோடி அவரது வாக்கைப் பதிவு செய்தார்.

மோடி பேரணியாக சென்றது விதி மீறல் இல்லை! தேர்தல் ஆணையம் பதில்
மோடி
  • News18
  • Last Updated: April 23, 2019, 9:23 PM IST
  • Share this:
குஜராத்தில் வாக்குப் பதிவு செய்த பிறகு, பிரதமர் மோடி பேரணியாக சென்றது தேர்தல் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அசாம், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் ரானிப் பகுதியிலுள்ள பள்ளியில் மோடி அவரது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்குப் பதிவு செய்த சிறிது தூரத்துக்கு நடந்து சென்றார். பின்னர், காரில் ஊர்வலமாகச் சென்றார். வாக்குப் பதிவு செய்த பிறகு, பேரணியாகச் சென்றது தேர்தல் விதி மீறல் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது. அந்தப் புகாரை பரிசீலித்த குஜராத் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர், ‘தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை’ என்று பதிலளித்துள்ளது.





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Also see:

First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading