மருத்துவ உலகில் ஒரு மைல்கல் - 30 கி.மீ தூரத்திலிருந்து ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்

30 கிலோ மீட்டர் தொலைவில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர் தேஜாஸ் படேல் சாதித்துள்ளார்

Web Desk
Updated: December 6, 2018, 1:56 PM IST
மருத்துவ உலகில் ஒரு மைல்கல் - 30 கி.மீ தூரத்திலிருந்து ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்
30 கிலோ மீட்டர் தொலைவில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர் தேஜாஸ் படேல் சாதித்துள்ளார்
Web Desk
Updated: December 6, 2018, 1:56 PM IST
இந்தியாவில் முதன்முறையாக குஜராத்தைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர், ரோபோ தொழில்நுட்பம் மூலம் 30 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இதய அறுவைச் சிகிச்சைச் செய்து சாதனை படைத்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இதயவியல் நிபுணர் மருத்துவர் தேஜாஸ் படேல், நேற்று மருத்துவ உலகில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அகமதாபாத்திலுள்ள மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணியாற்றிவருகிறார் படேல். அவர், இதய அறுவைச் சிகிச்சைக்கு அதிகமாக ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர். இந்த முறை முழுவதுமாக ரோபா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 30 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.

நேற்று, காந்திநகரிலுள்ள அக்ஷர்தம் கோயிலிலிருந்து, 30 கிலோ மீட்டர் தொலைவில் ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த நடுத்தர வயதுள்ள பெண்ணுக்கு ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

இது டெலி ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை(Tele-robotic surgery) என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவர் படேல், ‘20எம்.பி.பி.எஸ் வேகம் கொண்ட இணையவசதியைப் பயன்படுத்தி இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதய அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமில்லாமல், தசை தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த முறையில் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பம் கிராமப் புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மற்றும் வல்லமைக் கொண்டது’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, ‘கிராமப் புறத்திலுள்ளவர்களுக்கு சிறப்பான மருத்துவம் வழங்குவதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்
Loading...
Also see:

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்