ஐ.பி.எஸ் அதிகாரியாக திரும்ப வருவேன் - குஜராத் பெண் காவலர் சுனிதா

குஜராத்தில் அமைச்சரின் மகனுடைய காரை தடுத்த நிறுத்திய விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ள பெண் காவலர் சுனிதா தான் மீண்டும் ஐ.பி.எஸ் அதிகாரியாக வருவேன் என்றுள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரியாக திரும்ப வருவேன் - குஜராத் பெண் காவலர் சுனிதா
பெண் காவலர் சுனிதா யாதவ்
  • Share this:
குஜராத்தில் வாகன சோதனையின் போது அமைச்சர் குமார் கனானியின் மகனுடைய, காரை பெண் காவலர் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பிரதமரே வந்திருந்தாலும் நான் காரை தடுத்து இருப்பேன் என்று பெண் காவலர் சுனிதா துணிச்சலுடன் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பெண் காவலரின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றது, மேலும் அவரை 'லேடி சிங்கம்' என்று பலர் பாராட்ட தொடங்கினார். சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் பாலிவுட்டிலும் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் வருவது போன்று சுனிதா யாதவ் கம்பீரமாக செயல்பட்டதால் அவரை 'லேடி சிங்கம்' என புகழ தொடங்கின உள்ளனர்.

இதனிடையே பெண் காவலர் சுனிதா காவல் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார். இதனால் தனது காவலர் பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், “காக்கி சீருடையில் அதிகாரம் இருப்பதாக நான் நினைத்து இருந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையில் உயர் பதவி வேண்டும் என்பதை உணர்த்தி உள்ளது. நான் ஐ.பி.எஸ் தரத்துடன் திரும்பி வர உள்ளேன். எளிதில் முடிக்கப்பட வேண்டிய இந்த விஷயம் ஜவ்வாக நீண்டு கொண்டே செல்கிறது.


ஒருவேளை நான் ஐ.பி.எஸ் தேர்வில் தோல்வியடைந்தால் ஒன்று வழக்கறிஞராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ மாறுவேன் “ என்றார்.
படிக்க: ₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சிபடிக்க: இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்
மேலும் சமூக வலைதளங்களில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சுனிதா யாதவ் நான் 'லேடி சிங்கம்' இல்லை. எனது கடமையை தான் செய்தேன். நான் ஒரு சாதரண காவலர் தான் என்றும் தெரிவித்தார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading