குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!

vijay rupani

மோடிக்கு பிறகு ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வரானார், அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய் ரூபானி.

  • Share this:
குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார் விஜய் ரூபானி.

குஜராத் மாநிலத்தில் 1995ம் ஆண்டு முதல் ஒரு சில மாதங்கள் தவிர்த்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வரையில் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார் மோடி.

மோடிக்கு பிறகு ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வரானார், அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய் ரூபானி. 2022ம் ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் விஜய் ரூபானி.

இன்று மதியம் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார் விஜய் ரூபானி. இவரின் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படாததால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் ரூபானி, தன் மேல் நம்பிக்கை வைத்து முதல்வராக பணிபுரிய வாய்ப்பு கொடுத்த பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதல்வர் பதவி மாற்றம் என்பது பாஜகவுக்கு புதிதல்ல என்றும் கூறினார்.

Also Read: பாஜகவின் ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ கனவை பூர்த்தி செய்யும் ஆம் ஆத்மி – திரிணாமுல் காங்கிரஸ்!

பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தற்போது குஜராத்தில் முகாமிட்டிருப்பதால் விரைவில் புதிய முதல்வர் குறித்தான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த ஆண்டில் கர்நாடகா மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மையும், உத்தரகாண்டில் திரத் சிங் ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக திரிவேந்திர சிங் ராவத் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: