குஜராத்தில் பள்ளி வளாகத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதற்காக மாணவர்களை மன்னிப்பு கடிதம் எழுத வைத்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வாபியில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 9 வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவர் கடந்த மார்ச் 11ம் தேதி ஒருவருக்கொருவர் ஜெய் ஸ்ரீராம் என கூறி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். இதனை கண்ட ஆசிரியர் ஒருவர் பள்ளியின் விதிகளுக்கு எதிராக மத முழக்கங்களை எழுப்பியதற்காக, மாணவர்களை தனியே அழைத்துச் சென்று மன்னிப்பு கடிதம் எழுத வைத்துள்ளார்.
இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை அணுகியதாக தெரிகிறது.இதையடுத்து பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் விஎச்பியும் சேர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கடிதம்
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எங்கள் செயலால் உங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.