குஜராத் மாநிலத்தில் மாற்று எரிசக்தி துறையில் தொழில் செய்து வரும் ஒரு தொழிலதிபரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெண் புதிதாக அறிமுகமாகியுள்ளார். இவர் தனது பெயர் ரியா சர்மா என்றும் தான் மொர்பி பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.மெல்ல இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவர்கள் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர்.
அப்போது அந்த பெண் தொழிலதிபரிடம் ஆசை வார்த்தை கூறி, தன்னுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேச தூண்டியுள்ளார். அதன் பேரில் அந்த நபரும் பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார்.அதை பதிவு செய்து வைத்துக் கொண்ட அந்த பெண், தனக்கு ரூ.50,000 பணம் அனுப்ப வேண்டும் இல்லை என்றால், இந்த வீடியோவை வெளியே பரப்பிவிடுவேன் என்றும் பிளாக் மெயில் செய்துள்ளார். முதலில் ரூ.50,000 அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள்களில் ஒரு மர்ம நபர் தான் டெல்லி காவல் ஆய்வாளர் என்றும் தன்னிடம் அந்த வீடியோ உள்ளது இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று டெல்லி சைபர் போலீஸில் இருந்து அழைப்பதாக கூறி பெண் தற்கொலைக்கு முயன்றுவிட்டார் என்று மிரட்டி ரூ.80.97 லட்சம் பணம் பறித்துள்ளனர். பின்னர் பெண்ணின் தாயார் சிபிஐ அனுகியதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளின் போர்வையில் ரூ.8.5 லட்சம் பணம் பறித்துள்ளனர். இவ்வாறு ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை தொடர்ச்சியாக பணத்தை கொடுத்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர்.
இதையும் படிங்க: வளர்ப்பு நாயை கொன்று ஏரியில் வீச சென்ற பெண் சடலமாக மீட்பு... அதிர்ச்சி சம்பவம்
டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கை முடித்து விட்டதாக டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு என்ற பேரில் போலி ஆவணத்தை அந்த பிளாக் மெயில் கும்பல் அனுப்பியுள்ளது. அதை பார்த்து போலி என்று புரிந்த பின்னர் தான் அந்த தொழிலதிபருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி அந்த தொழிலதிபர் சைபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெண் உள்ளிட்ட 11 நபர்கள் மீது அந்த தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Cyber fraud, Gujarat, Online crime, Video calls