முகப்பு /செய்தி /இந்தியா / திருமண சடங்கில் மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்.. பெண்ணின் தங்கையை திருமணம் செய்த மாப்பிள்ளை!

திருமண சடங்கில் மயங்கி விழுந்து மணப்பெண் மரணம்.. பெண்ணின் தங்கையை திருமணம் செய்த மாப்பிள்ளை!

திருமண நாளில் உயிரிழந்த மணப்பெண் ஹீதல்

திருமண நாளில் உயிரிழந்த மணப்பெண் ஹீதல்

திருமண நாள் அன்று மணப்பெண் மயங்கி விழுந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

திருமண நாள் அன்று மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், பெண்ணின் சகோதரியை மணமகன் திருமணம் செய்த பரபரப்பு சம்பவம் குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் வசிக்கும் ஜினாபாய் ரதோட்டின் மகள் ஹீதல். இந்த இளம்பெண்ணுக்கும், ராணாபாய் அல்கோதர் மகன் விஷால் என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமண நாளில் விழா சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மணப்பெண் ஹீதல் திடீரென மயக்கமடைந்து சரிந்து விழுந்தார்.

பதறிப்போன குடும்பத்தார் உடனடியாக மணப்பெண்ணை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அங்கு பெண் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மணமகனை திருமணம் நடத்தாமல் அனுப்பக்கூடாது என குடும்பம் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.

உயிரிழந்த மணப்பெண்ணுக்கு தங்கை உள்ள நிலையில், அவரிடம் பேசி மணமகன் விஷாலை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்துள்ளனர். அதன் பேரில் உடனடியாக மரணமடைந்த பெண்ணின் தங்கை மற்றும் மாப்பிள்ளை விஷாலுக்கு திருமணம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: உயிரை காப்பாற்றிய இளைஞர்.. நண்பனாகவே மாறிப்போன நாரை.. நெகிழ்ச்சியான ஃபிரன்ஷிப் கதை!

திருமணம் முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யாமல் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் மரணமடைந்த பெண் ஹீதலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

First published:

Tags: Gujarat, Marriage