Home /News /national /

அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் நடத்தும் சிறுவர் இல்லம் மீது மதமாற்றம் புகார் - போலீசார் வழக்குப்பதிவு

அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் நடத்தும் சிறுவர் இல்லம் மீது மதமாற்றம் புகார் - போலீசார் வழக்குப்பதிவு

Missionaries of charity

Missionaries of charity

சிறுமிகள் சிலுவைகளை கழுத்தில் மாட்டச் செய்வது, அவர்களின் அறையில் பைபிள் வைக்கப்பட்டிருப்பது, கிறிஸ்துவ வழிபாட்டு முறைகளை பழக்கப்படுத்தியிருப்பது என மதமாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புகார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சிறுவர் இல்லத்தில், கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்தியாவில் சமூக முன்னேற்றத்திற்காக பல தொண்டுகளை மேற்கொண்டு மறைந்த அன்னை தெரசாவால் 1950ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிறிஸ்துவ அமைப்பு தான் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற தொண்டு நிறுவனம். இந்த தொண்டு நிறுவனத்தால் குஜராத் மாநிலம் வதோதராவில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்தில் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கடந்த டிசம்பர் 12ம் தேதி வதோதராவில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் அளிக்கப்பட்டிருக்கும் புகாரில், சம்பந்தப்பட்ட சிறுவர் இல்லத்தில் இந்து மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்கில் செயல்கள் நடைபெற்றுவருவதாகவும், அங்கு தங்கியிருக்கும் சிறுமிகளை கிறிஸ்துவத்தை ஏற்கச் செய்யும் நோக்கில் கட்டாயப்படுத்தி சில செயல்களை அரங்கேறி வருவதாகவும், தொடர்ந்து இந்து மதத்தைச் சேர்ந்த சிறுமிகள் கிறிஸ்துவ மத குடும்பத்தினரைச் சார்ந்தவர்களை திருமணம் முடித்து வைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    டிசம்பர் 9ம் தேதி வதோதரா மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை அதிகாரி மயங்க் திரிவேதி, குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி தலைவர் ஆகியோர் மகர்புராவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பு நடத்தி வரும் சிறுவர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டபோது அங்கு மதமாற்றத்தை தூண்டும் வகையிலான செயல்களை கண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    சிறுமிகள் சிலுவைகளை கழுத்தில் மாட்டச் செய்வது, அவர்களின் அறையில் பைபிள் வைக்கப்பட்டிருப்பது, கிறிஸ்துவ வழிபாட்டு முறைகளை பழக்கப்படுத்தியிருப்பது என மதமாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இல்ல நிர்வாகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Must Read :  யோகி துணையுடன் வாரணாசியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி

    அதே சமயம், தங்கள் இல்லத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாங்கள் செய்யும் செயல்களை சிறுவர்கள் பார்த்து அவர்களாகவே அதனை பின்பற்றி வருகிறார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Christian conversion, Religious conversion

    அடுத்த செய்தி