• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத்தில் மது அருந்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ கைது

குஜராத்தில் மது அருந்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குஜராத்தில் மது அருந்திவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.

  • Share this:
    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மாநிலம் குஜராத். அந்த மாநிலத்தில் 1960-ம் ஆண்டிலிருந்து மது விலக்கு அமலில் இருந்து வருகிறது. குஜராத் மாவட்டத்தில் மது அருந்துவதும், மது விற்பனை செய்வதும் குற்றமாக இருந்துவருகிறது. இருப்பினும், குஜராத் மதுபானங்கள் புழக்கத்தில் இருப்பது அவ்வப்போது நடைபெறும் சோதனையில் கண்டறியப்படுகிறது.

    குறிப்பாக, சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மதுபான விருந்துகளை நடத்தும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெறுகிறது என்று குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இந்தநிலையில், குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ குடித்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்ச்மஹால்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டில், ‘கோத்ரா பவாகாத் சாலையிலுள்ள ஜிம்மி கிளப் ரெசார்ட்டில் பவாகாத் குற்றப் பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 15 பேர் மது அருந்திவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில், மாடர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கேசரிசிங் சோலங்கியும் ஒருவர்’ என்று தெரிவித்தார். ஆனால், இந்த சோதனை குறித்தும் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு குறித்தும் வேறு ஏதும் அவர் தெரிவிக்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: