குடிநீர் பிரச்னையை கூறிய பெண்ணை நடுரோட்டில் தள்ளி மிதிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ! வைரலாகும் வீடியோ

உணர்ச்சிவசப்பட்டு பெண்ணைத் தாக்கிவிட்டேன். என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன். இது உள்நோக்கம் கொண்டது அல்ல. நான், 22 வருடங்களாக அரசியலில் இருந்துவருகிறேன்.

குடிநீர் பிரச்னையை கூறிய பெண்ணை நடுரோட்டில் தள்ளி மிதிக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ! வைரலாகும் வீடியோ
பெண்ணைத் தாக்கிய எம்.எல்.ஏ
  • News18
  • Last Updated: June 3, 2019, 7:12 PM IST
  • Share this:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கவந்த பெண்ணை நடுரோட்டில் வைத்து பா.ஜ.க எம்.எம்.ஏ எட்டி உதைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நிது தேஜ்வானி. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர். அவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை, நரோடா தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ பல்ராம் தாவனியைச் சந்தித்து, தொகுதிப் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, பல்ராம் தாவனியின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்களை சாலையில் தள்ளி தாக்கியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து, எம்.எல்.ஏ பல்ராமும் அந்தப் பெண்ணை ஓங்கி மிதிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


இதுகுறித்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் நிது தேஜ்வானி, ‘எங்கள் பகுதியிலுள்ள குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க பல்ராமைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் எதுவும் பேசாமல் என்னை அடிக்கத் தொடங்கிவிட்டார். அதைப் பார்த்த என்னுடைய கணவர், என்னைக் காப்பாற்ற வந்தார். உடனே, பல்ராமின் ஆதரவாளர்கள் என்னுடைய கணவரையும் கம்பைக் கொண்டு தாக்கினர். என்னுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்’ என்று தெரிவித்தார்.இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பல்ராம், ‘என்னுடைய அலுவலகத்தில் வைத்து நான் தாக்கப்பட்டேன். பாதுகாப்புக்காகத் தான் நான் திரும்பத் தாக்கினேன். உணர்ச்சிவசப்பட்டு பெண்ணைத் தாக்கிவிட்டேன். என்னுடைய தவறை உணர்ந்துவிட்டேன். இது உள்நோக்கம் கொண்டது அல்ல. நான், 22 வருடங்களாக அரசியலில் இருந்துவருகிறேன். இதுபோன்றதொரு நிகழ்வு நடைபெற்றதில்லை. நான், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏவின் செயலுக்கு காங்கிரஸ் கட்சியும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Also see:

First published: June 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading