ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

93 தொகுதிகளில் பதிவாக்கும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், அன்று பிற்பகலுக்குள் குஜராத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ahmadabad, India

குஜராத் மாநிலத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற 89 தொகுதிகளில், 63% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, 2வது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள வதோதரா, காந்தி நகர், அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இந்த தேர்தலில் வாக்களிக்க 2.54 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக, 36,000க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், 26,409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளுக்காக, 1,13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 92 தொகுதிகளை கைப்பற்றினால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும் என்பதால், இன்று நடைபெறும் தேர்தல் தான், யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என தீர்மானிக்கவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவரது தொகுதியான சபர்மதி பகுதியில் உள்ள ரானிப் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

93 தொகுதிகளில் பதிவாக்கும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், அன்று பிற்பகலுக்குள் குஜராத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும். அதேபோல், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் டிசம்பர் 8ஆம் தேதியே எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gujarat Assembly Election, PM Modi