ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தல்.. அகமதாபாத்தில் வாக்களிக்க வரும் பிரதமர் மோடி!

குஜராத்தில் நடைபெறும் 2ஆம் கட்ட தேர்தல்.. அகமதாபாத்தில் வாக்களிக்க வரும் பிரதமர் மோடி!

குஜராத் தேர்தல்

குஜராத் தேர்தல்

Gujarat Assembly Election: 93 தொகுதிகளில் பதிவாக்கும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat | Tamil Nadu

குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற 89 தொகுதிகளில், 63 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, இரண்டாவது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள வதோதரா, காந்தி நகர், அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இந்த தேர்தலில் வாக்களிக்க 2 கோடியே 54 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், 26 ஆயிரத்து 409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக, ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ALSO READ | ஜி-20 மாநாடு ஆலோசனைக்கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

குஜராத் மாநிலத்தில் 92 தொகுதிகளை கைப்பற்றினால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும் என்பதால், இன்று நடைபெறவுள்ள தேர்தல், யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று தீர்மானிக்கும் விதமாக உள்ளது.

93 தொகுதிகளில் பதிவாக்கும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், அன்று பிற்பகலுக்குள் குஜராத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

அதேபோல், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் டிசம்பர் 8ஆம் தேதியே எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத்தில் இன்று வாக்களிக்க உள்ளனர். முன்னதாக, நேற்று காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு சென்ற பிரதமர், தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து பேசினார்.

First published:

Tags: Election, Gujarat, Gujarat Assembly Election, Modi