ஹோம் /நியூஸ் /இந்தியா /

'டெல்லி மேஜிக் குஜராத்திலும் நடக்கும்' - உற்சாகத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள்.. சாதிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

'டெல்லி மேஜிக் குஜராத்திலும் நடக்கும்' - உற்சாகத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள்.. சாதிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

Gujarat assembly election : மும்முனை போட்டியாக குஜராத் களம் மாறியுள்ள நிலையில், 15-20 சதவீத வாக்குகளையும் கணிசமான சீட்டுகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையை ஆம் ஆத்மி கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லி மாநாகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் டெல்லி மாநகராட்சியை 15 ஆண்டுகளாக பாஜக தன்வசம் வைத்திருந்தது. இந்நிலையில், 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில், 250 இடங்களில் 134 இடங்களை ஆம் ஆத்மி கைப்பெற்றி பிரதான கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக 104 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம் டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15ஆண்டுகால ஆதிக்கத்தை ஆம் ஆத்மி முடிவுக்கு கொண்டுவந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 9 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

இன்று குஜராத் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அங்கும் தனது தடத்தை பதிக்க ஆம் ஆத்மி பெரும் முனைப்புடன் உள்ளது. தீவிரமான தேர்தல் பரப்புரை, கவர்ச்சி வாக்குறுதி என குஜராத் வாக்காளர்களை தன்வசமாக ஆம் ஆத்மி அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளது.

குஜராத்தில் சுமார் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை, காங்கிரஸ் பிரதான எதிர்கட்சியாக தொடர்ந்து வருகிறது. இந்த தேர்தலில் மும்முனை போட்டியாக குஜராத் களம் மாறியுள்ள நிலையில், 15-20 சதவீத வாக்குகளையும் கணிசமான சீட்டுகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையை ஆம் ஆத்மி கொண்டுள்ளது. இதை சாத்தியப்படுத்தினால் தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று நாங்கள் தான் என ஆம் ஆத்மி தங்களை முன்னிலைப்படுத்தும்.

இதையும் படிங்க: ”இந்தியாவிலேயே இருங்கள்..வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்”..! மாணவர்களுக்கு Zerodha இணை நிறுவனர் அட்வைஸ்..!

டெல்லியில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளை ஆம் ஆத்மி வீழ்த்தி காட்டியுள்ளது. அதேபோல், பஞ்சாப்பிலும் வரலாற்று வெற்றி பெற்று தடம் பதித்துள்ளது. குஜராத் மக்களும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தந்தால் எதிர்காலம் எங்களுக்குத் தான் என மற்ற மாநிலங்களிலும் கட்சியை வளர்த்தெடுக்கும் நம்பிக்கை மற்றும் கனவுடன் ஆம் ஆத்மி தலைவர்களும் தொண்டர்களும் ஆவலுடன் குஜராத் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர்.

First published:

Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Assembly Election 2022, Election Result, Gujarat, Gujarat Assembly Election