குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அமீ யாக்னிக்கை விட 1,92,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா அபார வெற்றி பெற்றார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 50,000 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றதைத் தொடர்ந்து, தனது கணவருடன் வாகனத்தில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
130-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமாக இருந்த தொங்கு பாலம் விபத்து நிகழ்ந்த மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்திலால் அம்ருதியா அமோக வெற்றி பெற்றார்.