ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் ரூ.500க்கு சிலிண்டர் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் ரூ.500க்கு சிலிண்டர் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

குஜராத் சட்டமன்ற தேர்தல்

குஜராத் சட்டமன்ற தேர்தல்

Gujarat Election : 182 சட்டப்பேரவை இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் 1ம் தேதி முதல்கட்டமும், 5ம் தேதி 2-ம் கட்டமும் நடைபெற்று, 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், சமையல் எரிவாயு உருளைகள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  182 சட்டப்பேரவை இடங்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் 1ம் தேதி முதல்கட்டமும், 5ம் தேதி 2-ம் கட்டமும் நடைபெற்று, 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

  இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை, ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் வெளியிட்டார்.

  அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : 'அது ஒரு கொலை'.. முதலமைச்சர் வாட்ஸ் அப்க்கு வந்த முக்கிய தகவல்.. வெளிச்சத்துக்கு வந்த சிறுமியின் மரணம்!

   மேலும், 300 யூனிட் மின்சாரம், 500 ரூபாய்க்கு சிலிண்டர் என்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் தர உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Election 2022, Gujarat, India