ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேர்தல் வெற்றிக்காகதான் பொது சிவில் சட்டம் வாக்குறுதி : பாஜகவை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்!

தேர்தல் வெற்றிக்காகதான் பொது சிவில் சட்டம் வாக்குறுதி : பாஜகவை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அம்மாநில பாஜக முதல்வர் பூபேந்திர பட்டேல் உயர்மட்டக் குழுவை அமைத்தார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  பொது சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவருவதாக கூறி பாரதிய ஜனதா கட்சி மக்களை ஏய்ப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  2022 குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான  தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மாநிலம் முழுவதும், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி  கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் முழு வீச்சில் தீவிர வாக்கு சேகரிப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த சூழலில், நாட்டின் மத பெரும்பான்மையினரின் கலாச்சார கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து வருகின்றனர். முன்னதாக, ஆம் ஆட்சி கட்சித் தலைவர், இந்திய ரூபாய்  நோட்டுகளில் இந்து மதக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

  இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் பொது சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அம்மாநில பாஜக முதல்வர் பூபேந்திர பட்டேல் உயர்மட்டக் குழுவை அமைத்தார்.

  இந்நிலையில், இன்று குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பொது சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவருவதாக கூறி பாரதிய ஜனதா கட்சி மக்களை ஏய்த்து வருகிறது என்று தெரிவித்தார்.

  உத்தரகாண்ட் மாநில தேர்தல் வெற்றிக்குப் பிறகு பொது சிவில் உரிமைச் சட்டம் தொடர்பாக பாஜக உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்ததாகவும், ஆனால் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை  என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

  இதையும் வாசிக்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா : சீனாவில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியே செல்ல தடை!

  மேலும், தற்போது பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரேதசத்தில் பொது சிவில் உரிமைச் சட்டம் அமலாக்கம் குறித்த ஏன் உயர்மட்டக் குழு அமைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.  குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தினைக் கொண்டு வர அரசு முயல் வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பின்  44வது சரத்தை  சுட்டிக் காட்டிய அவர், "  நாடு முழுவதும் இச்சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டு வர முனைய வில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காத்திருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

  இந்திய அரசியலமைப்பு தந்த தனிமனித  அடிப்படைஉரிமைக்கும் (Individual Rights), சிறுபான்மையினர் என்ற கூட்டு அடையாள பாதுகாப்புக்கும் (Collective Identity ) பொது சிவில் சட்டம் அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய முஸ்லீம்கள் கருதி வருகின்றனர். இது, தொடர்பான விவரத்தை இந்திய சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், பலதார திருமணம் (Polygamy), திருமண செயலாக்கம் (Nikah Halala), திருமண வாழ்க்கை (Nikah Misyar) உள்ளிட்டவை குறித்த மனுக்களை (சமீனா பேகம் வழக்கு ) உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: BJP, Election 2022, Gujarat, Uniform Civil Code