ஹோம் /நியூஸ் /இந்தியா /

தொடர்ந்து 7 மாதமாக ரூ. 1.4 லட்சம் கோடி வசூலான ஜி.எஸ்.டி வருவாய் - மத்திய அரசு தகவல்..

தொடர்ந்து 7 மாதமாக ரூ. 1.4 லட்சம் கோடி வசூலான ஜி.எஸ்.டி வருவாய் - மத்திய அரசு தகவல்..

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 7,842 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு ரூ. 8,637 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaIndiaIndia

  நாட்டின் ஜி.எஸ்.டி வருவாய் தொடர்ந்து 7வது மாதமாக, ரூ. 1,40,000 கோடி கடந்துள்ளது.

  இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ. 1,47,686 கோடி ஜிஎஸ்டி வருவாயாக கிடைத்துள்ளது. அதில், மத்திய அரசு வருவாயாக ரூ. 25,271 கோடியும், மாநில அரசுகளின் வருவாயாக ரூ. 31,813 கோடியும் வசூலாகியுள்ளது.

  ஒருங்கிணைந்த வருவாயாக ரூ. 80,464 கோடியும் செஸ் வருவாயாக ரூ. 10,137 கோடியும் கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ஆனது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலானதை காட்டிலும் 26% அதிகம் ஆகும்.

  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 7,842 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு ரூ. 8,637 கோடி கூடுதலாக வசூலாகி 10% வளர்ச்சி அடைந்துள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: FINANCE MINISTRY, GST, Union Govt