ஜி.எஸ்.டி வருவாயை உயர்த்தத் திட்டம்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி வருவாயை உயர்த்தத் திட்டம்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: December 16, 2019, 8:18 PM IST
  • Share this:
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரி வருவாயை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை சுமார் 35ஆயிரத்து 298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பேசிய அவர், ஜிஎஸ்டி வரிவருவாய் குறைந்துள்ளதால், மாநில அரசுகளுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜிஎஸ்டி வரி வருவாயை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து வரும் 18ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பட்ஜெட் தயாரிப்பை முன்னிட்டு பல்வேறு துறையினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். மேலும் பொதுமக்களும் பட்ஜெட்டுக்கான தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.


Also see:
First published: December 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்