• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உணவுப் பிரியர்களுக்கு சோகமான செய்தி: ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி

உணவுப் பிரியர்களுக்கு சோகமான செய்தி: ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களையும் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவருவதற்கு ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

  • Share this:
    மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றனர். சென்னையில் மட்டுமே நூற்றுக்கனக்கான இளைஞர்கள் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி என்ற பல நகரங்களிலும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் தங்களது சேவையை விஸ்தரித்துள்ளனர்.

    இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி வரிமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால், சுவிக்கி- சுமாட்டோ போன்ற உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில், ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    ஹோட்டல்களில் விற்க்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டுவருகிறது. ஆனால் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாக கட்டுவது இல்லை. 2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஹோட்டல்கள் இந்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். எனவே ஹோட்டல்களில் முறையாக வரி வசூல் செய்வதற்கு திட்டங்களை செய்து இருக்கிறார்கள். 17-ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

    அதில் இது சம்பந்தமாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹோட்டலிலிருந்து உணவுகளை வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யும் சுவிக்கி- சோமேட்டோ போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர உள்ளனர். இதுகுறித்து ஜி.எஸ்.டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே ஓட்டலுக்கும் வரி செலுத்திவிட்டு அதன் சப்ளை நிறுவனங்களுக்கும் வரி செலுத்தி இரட்டை வரிமுறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே அதைத் தவிர்க்க ஸ்விக்கி- சோமேட்டோ நிறுவனங்களுக்கு உணவு சப்ளை வழங்குவதை, ஹோட்டல்கள் தனிக்கணக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் வர இருக்கிறது. மேலும் இந்த உணவு சப்ளை நிறுவனங்கள் தங்கள் பில் முறைகளை கையாளும் சாப்ட்வேர்களில் மாற்றங்களை கொண்டு வரவும் ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரை செய்ய இருக்கிறது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்க இருப்பதால் உணவு பொருட்கள் விலை உயர்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: