ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்கிறதா? மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூட்டம்

ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்கிறதா? மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூட்டம்
ஜி.எஸ்.டி
  • News18
  • Last Updated: December 17, 2019, 8:15 PM IST
  • Share this:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் 38-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது. டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடி ரூபாயாக இருந்தது. 2017 ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது அதிக வசூல் இதுவாகும். ஆனாலும் மத்திய அரசு திட்டமிட்ட இலக்கை ஜிஎஸ்டி வசூல் எட்டவில்லை என கூறப்பபடுகிறது.

அதனால் பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்கும் நிலையில், அப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கக் கூடாது என அகில இந்திய பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் வரியை குறைக்க வேண்டும் என்று வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சூழலில் இதனிடையே ஜிஎஸ்டி வசூலில் மாநிலங்களுக்கான பங்கீட்டுத் தொகையாக 35,298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.


Also see:

 
First published: December 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்