Home /News /national /

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம்

GST

GST

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தும் பட்சத்தில் கூட்டாட்சி அமைப்பையே சீர்குலைத்துவிடும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என தெளிவுப்படுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
    ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றும் வரி விதிப்பில்  இருவருக்குமே சம உரிமை உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 2017ம்  ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவை தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று  நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாணைக்கு வந்தது.

    அப்போது,  ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.  ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளதாகவும், இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடு எனவும் கூட்டாட்சி அலகுகளில் ஒன்று எப்போது உயர் நிலையை கொண்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும்  நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


    எனவே, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தும் பட்சத்தில் கூட்டாட்சி அமைப்பையே சீர்குலைத்துவிடும் என்றும் கருத்து தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள்,ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தினர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: GST, Supreme court

    அடுத்த செய்தி