ஹோம் /நியூஸ் /இந்தியா /

செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இருந்து 18 விழுக்காடாக உயர்வு - நிர்மலா சீதாராமன்

செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இருந்து 18 விழுக்காடாக உயர்வு - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

”கைகளால் செய்யப்படும் தீக்குச்சிகள் மற்றும் எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் என அனைத்திற்கும் ஒரே மாதிரியாக 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது”

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

  ஜிஎஸ்டி கவுன்சிலின் 39வது கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கைகளால் செய்யப்படும் மற்றும் எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக மாற்றியமைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

  இதுவரை கைகளால் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 விழுக்காடாகவும், எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 விழுக்காடாகவும் இருந்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே மாதிரியாக 12 விழுக்காடாக மாற்றியமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

  மேலும், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

  கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உரத்தின் மீதான வரி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

  இதனிடையே, தீக்குச்சிகளுக்கு சீரான வரி விதித்திருப்பது தொழில் வளர்ச்சியடைய உதவும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தீப்பெட்டிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மீண்டும் 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Also see...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Delhi, GST, Minister Nirmala Seetharaman