முகப்பு /செய்தி /இந்தியா / ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள்: நிலைப்பாட்டை மாற்றிய மகாராஷ்டிர அரசு!

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள்: நிலைப்பாட்டை மாற்றிய மகாராஷ்டிர அரசு!

பெட்ரோல்

பெட்ரோல்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மகாராஷ்டிர அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Last Updated :

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருக்கும் நிலையில் மகாராஷ்டிர அரசு தனது முந்தைய ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்று எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ந்தியா முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி முறைக்குள் கொண்டு வரப்பட்டது. 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என 5 விதமான ஜிஎஸ்டி வரிகள் இதில் உள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள், விமான பெட்ரோல் போன்ற குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் பழைய வாட் வரி முறையிலேயே நீடித்தன.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருப்பதால் இதன் விலை விண்ணை முட்டும் வகையில் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டுவர முடியும். அனைத்து மாநில நிதியமைச்சர்களும் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் இன்று லக்னோவில் நடைபெறவிருக்கும் 45வது மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மகாராஷ்டிர அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் கூறுகையில், மத்திய அரசு தான் வரியை குறைக்க வேண்டும், மாநில அரசின் வரியை குறைப்பதாக இருந்தால் நாங்கள் எதிர்ப்போம் என பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதில்

தங்களுக்கு விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் அஜித் பவார்.

அவர் மேலும் கூறுகையில், சீரமைப்பு நடவடிக்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, எங்கள் உரிமை எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. மாநில அரசின் வரி விதிப்பு முறையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார்.

top videos

    கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிர நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய அஜித் பவார், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: GST, GST council, Petrol Diesel Price