ஹோம் /நியூஸ் /இந்தியா /

இத்தனை கோடியா? அக்டோபரில் கல்லா கட்டிய ஜிஎஸ்டி… இதுவரை இல்லாத வசூல்!

இத்தனை கோடியா? அக்டோபரில் கல்லா கட்டிய ஜிஎஸ்டி… இதுவரை இல்லாத வசூல்!

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 33,396 கோடியாகவும் இருந்தது.

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 33,396 கோடியாகவும் இருந்தது.

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 33,396 கோடியாகவும் இருந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மத்திய அரசு ரூ. 1.52 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச வசூலாகும் என்றும் அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

  கடந்த 8 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டியின் வருவாய் சராசரியாக ரூ. 1.40 லட்சம் கோடிக்கு மேல் தொடர்ந்து இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது; மேலும், இது பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட்டது.

  இதுகுறித்து நிதி அமைச்சகம் கூறியதாவது, அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வருவாய் இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் ஆகும். ஏப்ரல் 2022-க்குப் பிறகு, இரண்டாவது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.52 லட்சம் கோடியாக இருந்தது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 2022-ல் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே மொத்த ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் 2021-ல் ரூ. 1.30 லட்சம் கோடியாகவும், பின்னர் ஓராண்டில் செப்டம்பர் 2022-ல் ரூ. 1.42 லட்சம் கோடியாகவும் இருந்தது.

  அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 33,396 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 81,778 கோடியாகவும், செஸ் ரூ. 10,505 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ. 37,626 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ. 32,883 கோடியும் அரசு சமர்பித்துள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே 50 : 50 என்ற விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் ரூ. 22,000 கோடியை சமர்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  அதன்படி, அக்டோபர் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே ரூ. 74,665 கோடி மற்றும் ரூ. 77,279 கோடியாக இருந்துள்ளது. ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வசூல் அக்டோபரில் ஆண்டுக்கு ஆண்டு சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தாலும், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் வருவாயில் 14 சதவீத வளர்ச்சியை மட்டுமே தொடர்கின்றன என குறிப்பிட்டுள்ளது.

  மொத்தத்தில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பர் மாதத்தில் 14 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை எட்டியுள்ளது. மறுபக்கம், ஆண்டுக்கு ஆண்டு பல மாநிலங்கள் தங்கள் ஜிஎஸ்டி வருவாயில் சரிவைக் காண்கின்றன. பாதுகாக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மாநிலங்களின் வசூல் 14 சதவீதம் அதிகமாக இல்லாவிட்டால், மாநிலங்களுக்கு இனி இழப்பீடு வழங்கப்படாது என கூறியுள்ளது.

  Published by:Archana R
  First published:

  Tags: FINANCE MINISTRY, GST