அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது..

ஜிஎஸ்டி

தமிழகம் உள்பட நாடு முழுவதும் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1,05,155 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்கு பின் முதன்முறையாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறை முடங்கிய நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பாதிப்படைந்தது.

  கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மைனஸ் 14 சதவீதம் மற்றும் மைனஸ் 8 சதவீதமாக வரி வருவாய் சரிவடைந்தது. செப்டம்பரில் சற்றே முன்னேறி 5 சதவீதமாக உயர்ந்த நிலையில், அக்டோபர் மாத வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

  மேலும் படிக்க...சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் தொடங்கியது..  அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாயாக 1,05,155 கோடி ரூபாய் வசூலாகியுள்ள நிலையில், இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வசூலான தொகையை விட 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபரில் ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 161 கோடி கிடைத்துள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: