மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ₹1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய்!

அக்டோபர் மாதத்தைவிட 6 சதவிகித உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ₹1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய்!
ஜிஎஸ்டி
  • News18
  • Last Updated: December 2, 2019, 7:26 PM IST
  • Share this:
ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைத்த வருமானப் பட்டியலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தைவிட 6 சதவிகித உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,380 கோடி ரூபாய் ஆக இருந்தது. 2018 நவம்பரில் ஜிஎஸ்டி வருமானம் 97,637 கோடி ரூபாய் ஆக இருந்தது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய ஜிஎஸ்டி வருவாய் 19,592 கோடி ரூபாய் ஆகவும் மாநில ஜிஎஸ்டி வருவாய் 27,144 கோடி ரூபாய் ஆகவும் சர்வதேச (ஏற்றுமதிகள் உள்ளிட்ட) ஜிஎஸ்டி வருவாய் 49,028 கோடி ரூபாயாகவும் மொத்தம் 1,03,492 கோடி ரூபாய் ஆகவும் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூன்று மாதங்களுக்குப் பிறகு 1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் என்பது நல்ல வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில்தான் உள்நாட்டுப் பரிவர்த்தணைகள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் 12 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளதாம்.

மேலும் பார்க்க: ஊதிய உயர்வு 9.2% ஆக அதிகரிக்கும்... ஆசியாவிலேயே அதிக சம்பளம் தரும் நாடாக இந்தியா உயரும்!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்