பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தெரிவித்துள்ளது.
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக 'ஈ.ஓ.எஸ்.-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைகோள் 2,268 கிலோ எடை கொண்டது. இது ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ (GSLV F10) ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை (ஆகஸ்ட் 12) அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, நாளை திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Must Read : கொரோனாவிலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு - நிர்மலா சீதாராமன்
நாளை விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன மற்றும் சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO, Sriharikota