Home /News /national /

இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்!

இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்!

இஸ்ரோ

இஸ்ரோ

  • News18
  • Last Updated :
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைக்கான ஜிசாட்-29 செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் இன்று மாலை 5 மணி 8 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில் நுட்பத்தில் தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு, சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி 18 நிமிட நேர 'கவுண்ட் டவுன்' நேற்று மதியம் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதையடுத்து செயற்கைக்கோளை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடல்சார் ஆராய்ச்சி, தொலைத்தூர தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. மூவாயிரத்து 425 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளில் அதிநவீன சக்தி கொண்ட டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு அனுப்ப முடியும். பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஜிசாட்-29 செயற்கைகோளை நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 என்பது தனிச்சிறப்பு. தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 ஆகும். கஜா புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் ராக்கெட் ஏவப்படாது என்று செய்திகள் வெளியாகின. இதனை மறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட்டும், ஏவுதளமும் அனைத்து விதமான காலநிலையை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டதால் புயல் பற்றி கவலைப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: GSAT-29, Satellite

    அடுத்த செய்தி