முகப்பு /செய்தி /இந்தியா / திருமணச் சடங்கின்போது மணப்பெண் திடீர் மரணம்: தங்கையுடன் நடந்து முடிந்த திருமணம்!

திருமணச் சடங்கின்போது மணப்பெண் திடீர் மரணம்: தங்கையுடன் நடந்து முடிந்த திருமணம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இருப்பினும், இந்த நிகழ்வை கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய சமகால பின்னணியிலும், பெண்கள் மறுமணம் செய்தால் அதை விமர்சிக்க, அவதூறு பரப்ப பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், மறுமணம் செய்யும்  கணவன்கள் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகுவதில்லை. இத்தகைய கொடுப்பினை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. குஜராத்தில், திருமணம் நடை பெறுவதற்கு முன்பே, மணமகனுக்கு மறுமணம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல் பல்வேறு விவாதங்களை சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போது மணமகள் இறந்துவிட, மணமகனுக்கும் இறந்தவரின் தங்கைக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகும் செய்தியில், " குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மகாதேவ் திருக்கோயில் முன்பாக மணமகன் விஷால் மற்றும் மணமகள் கேதால் (Hetal) ஆகிய இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண சடங்குகள்போது, மணமகள் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் எந்தவித பலனும் இல்லை. மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடந்து, அதே திருமண மேடையில் இறந்தவரின் தங்கையை திருமணம் செய்து வைக்க  பெண்ணின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். இறந்தவர் பிணவறையில் இருக்கும்போதே,  இரண்டாம் மகளுக்கு அதே மணமகனை திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நகர் மன்ற உறுப்பினரும் மாலதாரி சமாஜி என்ற அமைப்பின் தலைவருமான  லக்ஷமன்பாய் ரத்தோர் கூறுகையில், " இது மிகவும் துயரமான நிகழ்வு. மணமகன் வீட்டாரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம் என்ற முடிவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

2021ல் இதே போன்ற சம்பவம்: 

உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும், இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர் .

இருப்பினும், இந்த நிகழ்வை கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது மகளின் விருப்பத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பும் அவர்கள்,    ஒரு நியாயமான திருமண வாழ்ககைக்கு ஆணும், பெண்ணும் முக்கியமானவர்கள். ஆனால், பெரும்பாலான திருமணங்களில் பெண்களின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர், சுற்றத்தினரின் வற்புறுத்தல்களை மட்டுமே முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Marriage, Trending News