நீயூஸ் பேப்பர் படிங்க.. கண்ணாடி இல்லாமல் திணறிய மணமகன் - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மாதிரிப்படம்

கண் பார்வை குறைபாடு உள்ள நபரை நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என மணப்பெண் அர்ச்சனா கூறிவிட்டார்.

 • Share this:
  உத்தரபிரதேசத்தில் கண்பார்வை குறைபாடுள்ள நபரை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த மணப்பெண். வரதட்சனை திரும்பி கொடுக்காததால் காவல்நிலையம் வரை சென்ற விவகாரம்.

  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜமல்பூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் சிங் தனது மகள் அர்ச்சனாவுக்கு திருமணத்துக்கு வரன் தேடியுள்ளார். பன்ஷி கிராமத்தை சேர்ந்த சிவம் -அர்ச்சனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சிவம் நன்றாக படித்து நல்ல வேலையில் இருப்பதால் இருவீட்டாரும் பேசி திருமண தேதியை முடிவு செய்தனர். அதற்கான பணிகளில் இருவீட்டாரும் ஈடுபட்டு வந்தனர்.

  Also Read: ‘தளபதி விஜய் கூல்’ - பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ரிப்ளை

  திருமணத்துக்கு முன்பு நிச்சயம் போன்ற சடங்கு செய்வார்கள்.ஜூன் 20-ம் தேதி இந்த சடங்குகள் செய்வதற்காக  சிவம் தனது குடும்பத்தினருடன் அர்ஜூன் சிங் இல்லத்துக்கு வந்துள்ளார். சிவம் வந்ததில் இருந்து கண் கண்ணாடியை கழட்டவே இல்லை. கண்ணாடி அணிந்தவாறே இருந்துள்ளார். இதன்காரணமாக அர்ஜூன் சிங் குடும்பத்தினருக்கு  மணமகள் அர்ச்சனாவுக்கும் சிவம் கண்பார்வையில் குறைபாடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து மணமகனை கண்ணாடியை கழற்றிவிட்டு ஹிந்தி நீயூஸ் பேப்பரை படிக்கும்படி கூறியுள்ளார். கண் பார்வை குறைபாடு காரணமாக அவரால் நீயூஸ் பேப்பரை படிக்க முடியவில்லை. பார்வையும் மிகவும் மங்கலாக இருந்துள்ளது. இதனையடுத்து கண் பார்வை குறைபாடு உள்ள நபரை நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என மணப்பெண் அர்ச்சனா கூறிவிட்டார். இதனையடுத்து தனது மகளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அர்ஜூன் சிங் திருமணத்தை நிறுத்தி விட்டார்.

  திருமணத்துக்கு வரதட்சணையாக சிவம் குடும்பத்தினர் பைக் மற்றும் சில லட்சங்களை வாங்கியுள்ளனர். அதனை திருப்பி தர மறுத்துவிட்டனர். இதனையடுத்து அர்ஜூன் சிங் காவல்நிலையத்தை நாடினார். மணமகன் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: