முகப்பு /செய்தி /இந்தியா / திருமணத்தில் டிஜே மியூசிக் சத்தம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்த மணமகன்... மரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

திருமணத்தில் டிஜே மியூசிக் சத்தம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்த மணமகன்... மரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

மணமகன் சுரேந்தர்

மணமகன் சுரேந்தர்

டிஜே இசை சத்தம் தாங்க முடியாமல் 22 வயது மணமகன் உயிரிழந்த சம்பவம் அனைவரின் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

தனது திருமண நாளில் டிஜே மியூசிக் சத்ததை கேட்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தில் உள்ள மணித்தர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது நபர் சுரேந்திர குமார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மார்ச் 1ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்தர்வா என்ற கிராமத்தில் மணப்பெண் வசிக்கும் நிலையில், அங்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. திருமண நாளான மார்ச் 1ஆம் தேதி மணமகன் ஊர்வலம் நடைபெற்ற நிலையில், பின்னர் மேடைக்கு வந்த மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது டிஜே இசை சத்தமாக ஒலிக்கப்பட்டு அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்தனர்.

இந்த டிஜே இசை சத்தம் ஜாஸ்தியாக இருப்பது தனக்கு தொந்தரவாக இருப்பதாகவும் அதை குறைக்க வேண்டும் எனவும் மணமகன் சுரேந்தரா கூறியுள்ளார். இருப்பினும் ஒலி சத்தம் குறைக்காமல் மியூசிக் அப்படியே ஒலித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், மணமகன் தனக்கு தலை சுற்றி நெஞ்சு வலிப்பதாகக் கூறி மேடையிலேயே சரிந்து விழுந்தார்.

பதறிப்போன உறவினர்கள் சுரேந்தரை மருத்துவமனைக்கு தூக்கி சென்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். டிஜே இசை சத்தம் தாங்க முடியாமல் 22 வயது மணமகன் உயிரிழந்த சம்பவம் அனைவரின் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Bihar, Marriage, Music